நாளை மறுநாள் 7-ம் கட்ட அகழாய்வு பணி தொடக்கம்..!

The seventh phase of excavation work will begin the next day at four locations following the 6th phase of excavation below.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியாக நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இந்த ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2015 முதல் கடந்த ஆண்டு ஆண்டு வரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  வாழ்க்கை முறையை அறியும் வகையில், மண்பாண்ட பொருட்கள், மனித மற்றும் விலங்கு எலும்பு கூடுகள் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.