குடியுரிமை திருத்த சட்டதிற்கு இஸ்லாமியர்கள் சவப்பெட்டி சுமந்து எதிர்ப்பு.!

- கடலூர் மாவட்டத்தில் உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அப்போது சவப்பெட்டி ஏந்தியும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் முஸ்லீம் அமைப்பினர் தினமும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள வாத்தியாப்பள்ளி அருகே திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சவப்பெட்டி ஏந்தியும் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும், இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலவத்திற்கு நடுவே சவப்பெட்டியை வைத்து அதில் கருப்பு துணியை போர்த்தி குடியுரிமை சட்டம் தேவையில்லை என்ற வாசகங்களுடன் சென்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025