கடலூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

mk stalin

MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தமிழகத்தில் நாடாளுமன்றம் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பிரதான அரசிய கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின், தங்களது மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

Annamalai: அண்ணாமலை, பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு. 18வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக … Read more

கனமழை: கடலூரில் பெய்த 130 ஆண்டுகளில் இல்லாத மழை!

RAIN

தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், கடலூரில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் இது 3வது அதிகபட்ச மழை என்றும், இதற்கு முன்பு … Read more

ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு!

rain

நாளை (ஜனவரி 8)  செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் … Read more

போக்குவரத்து இடையூறு.! டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்.!

கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர்.  யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன். இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் … Read more

மாண்டஸ் புயல் : கடலூரில் 60கிமீ வேகத்தில் பலத்த காற்று.! 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.!

கடலூரில் தரைக்காற்று வீசும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார்  60கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் சாதாரண … Read more

ஒரு பெண் பலி.! கூடலூரில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை அதிரடி உத்தரவு.!

நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை கொன்ற யானையை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.   நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு பெண்ணின் வீட்டில் மூன்று யானைகள் புகுந்த்து, இடத்தை சேதப்படுத்தி பின் அந்த பெண்ணையும் கொன்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராமத்து மக்கள் சாலையில் இறங்கி போராடினர். அந்த யானைகளை பிடிக்க உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை விடுத்து,  உடலை வாங்குவோம் என கூறியிருந்தனர். இதுவரை … Read more

மழை பாதிப்பு – நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்!

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. கனமழையால், விலை நிலங்கள் … Read more

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் கைது!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் உள்ளிட்ட 22 பேர் கைது. கடலூரை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நெய்வேலி புரோக்கர் பாலாஜி உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.  சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உட்பட 27 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான புரோக்கரின் மனைவி உமா … Read more

இரண்டு வாரத்திற்குள் 3 மாணவிகள்..விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தமிழகத்தில் 3வது மாணவி தற்கொலை, விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் முடிவதற்குள்ளாகவே தொடர்ந்து இரு மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 பயிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது மேலும் பெரும் … Read more