அக்டோபர் 6 இடைத்தேர்தல்: 4 நாட்கள் களத்தில் இறங்கும் முதல்வர் விஜய்!

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளர்களை ஆதரித்துப் பிரம்மாண்டப் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் களம் உச்சக்கட்ட அனலை எட்டியுள்ள இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் வீதம் மொத்தம் 4 நாட்கள் தங்கி மிகத் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளதாகத் தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுக-அமமுக கூட்டணி மற்றும் திமுக தரப்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகள் தங்களது ஆதரவை அறிவித்துள்ளதால் தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், தங்களது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கவும் முதலமைச்சர் விஜய் நேரடியாகக் களமிறங்குகிறார்.

இதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) தொகுதியில் 2 நாட்களும், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) தொகுதியில் 2 நாட்களும் என மொத்தம் 4 நாட்கள் சூறாவளிப் சுற்றுப்பயணம் செய்து அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற மிஷெலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத் தொடரைத் தொடங்கி வைத்துவிட்டு, அஜித்குமாருடனான பாசச் சந்திப்பை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் தற்பொழுது சென்னை திரும்பியுள்ளார். அவர் சென்னை திரும்பிய உடனே இந்த 4 நாட்கள் தேர்தல் பிரசாரத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் எந்தெந்த தேதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் ரோடு ஷோ (Road Show) மற்றும் பொதுக்கூட்டங்களில் பேசப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வத் தேதிகள் மற்றும் பிரசாரப் பயண விபரங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தலைமைக் கழகத்தால் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளன.

அக்டோபர் 6 இடைத்தேர்தல்: 4 நாட்கள் களத்தில் இறங்கும் முதல்வர் விஜய்!