இரவு நேர ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்கள்..!

Northern workers are leaving for their hometowns due to the nighttime lockdown..!

தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரங்கை அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால்,தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்த நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதனால்,கடந்த ஆண்டைப் போல மீண்டும் அனைத்து நாட்களிலும் முழு ஊரடங்கை அரசு அறிவிக்கும் என்ற அச்சத்தில் தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.இருப்பினும்,ரயிலில் முன்பதிவு செய்யாதவர்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.