சென்னை :2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு ஊருக்கு சென்று பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் பல முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார். அதில் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என திட்டவட்டமாக கூறினார். இது குறித்து பேசிய அவர் “விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது. கூட்டணிக்கு வந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால், சினிமாவில் விஜயகாந்த் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” சமீபத்தில், சில கட்சிகள் விஜயகாந்தின் புகைப்படத்தை அவர்களது பிரச்சாரங்களில் தவறாக பயன்படுத்தியதாக வந்த புகார்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக தொண்டர்கள் மத்தியில், இது கட்சியின் மரியாதை மற்றும் மறைந்த தலைவரின் மரபை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.விஜயகாந்தின் சினிமா பங்களிப்பு குறித்து பேசிய பிரேமலதா, “சினிமா துறையில் விஜயகாந்த் அவர்களின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அது அவரது கலை பயணத்தின் ஒரு பகுதி. ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக அவரது புகைப்படத்தை பயன்படுத்துவது முற்றிலும் தவறு,” என்று தெரிவித்தார்.
மேலும் பேசுகையில் “விஜயகாந்த் அவர்களின் பெயரையும் புகைப்படத்தையும் தேமுதிகவின் கொள்கைகளை முன்னெடுக்கவே பயன்படுத்துவோம். மற்றவர்கள் இதை தவறாக பயன்படுத்தினால், சட்டரீதியாகவும், மக்கள் மன்றத்திலும் எதிர்க்கப்படுவார்கள்,” என்று பிரேமலதா எச்சரித்தார். தேமுதிக தொண்டர்களுக்கு, விஜயகாந்தின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன், கட்சியின் தலைமையிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
