கரையை கடந்த நிவர் புயல்! கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்!

The No. 10 storm warning cage was installed in Cuddalore yesterday. The storm warning cage has been lowered after Nivar crossed the coast.

கடலூரில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல்  கரையை கடந்ததையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புயலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பல மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அந்த வகையில், கடலூரில் நேற்று 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல்  கரையை கடந்ததையடுத்து, புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.