கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் !

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மாணவியின் தாயார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மாணவியின் தாயார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்பட்டது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, நீதி கேட்டு தொடர்ந்து மாணவியின் தாயார் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அதன்பிறகு ஜூலை 17-ஆம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த சமயத்தில் மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

மறுபக்கம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கலவரத்துக்கான காரணம், கலவரத்தில் ஈடுபட்டவர்களை அந்த குழு கைது செய்தது. இதுவரை கலவரம் தொடர்பான வழக்கில் 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இதனிடையே, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் வெளியானதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவி மரணம் தொடர்பாக எதையும் வெளியிட கூடாது என சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மாணவி உயிரிழந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் மாணவி தாயார் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியானதாக கூறப்படுகிறது.

மாணவி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும்,எதிர் தரப்பில் சக்தி மெட்ரிக் பள்ளியின் நிர்வாகிகள் தரப்பில் 4 பேர் மாணவி தரப்பிடம் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

13ஆம் தேதி உயிரிழந்த நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என மாணவியின் தாயார் குற்றசாட்டு முன்வைத்திருந்த நிலையில்,இந்த சிசிடிவி ஆதாரம் வெளியாகியிருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.