#BREAKING: மதுரை ஆதீனம் கவலைக்கிடம்..!

According to the hospital management, Madurai Athena is in a critical condition.

மதுரை ஆதீனம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார். இதில்அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆகவுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரை ஆதீனம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.