ஜெயலலிதா, எம்ஜிஆர்-க்கு வாரிசு கிடையாது! வாணியம்பாடியில் மினி கிளினிக் திட்டத்தை துவங்கி வைத்து முதல்வர்பேச்சு !

MGR, Jayalalithaa has no heir. People are the heirs to 2 people. Is it great to meet people or is it great to sit at home and talk?

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு. மக்களை சந்திப்பது பெரிதா அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா?

ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை  அளிக்கும் வகையில், ‘மினி கிளினிக்’  கொண்டுவரப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு ‘முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் வாணியம்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், சேலத்தில், 100 இடங்களில் மினி கிளினிக் உள்ளது. அதிமுகஅரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது என்றும், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு. மக்களை சந்திப்பது பெரிதா அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.