இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் – க.வீரமணி!

Ki Veeramani has said that the rescue of four Tamil Nadu fishermen attack by the Sri Lankan Navy should not be delayed any longer.

இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு தமிழக மீனவர்கள் மூழ்கியுள்ள நிலையில் இனியும் தாமதிக்க கூடாது, மீனவர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழக மீனவர்களின் படகுகள் மூழ்கி, அவர்கள் மாயமாகி உள்ள சம்பவம் தற்பொழுது பல அரசியல் தலைவர்களின் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கை கடற்படை மூழ்கடித்து 4 தமிழக மீனவர்களின் படகு மற்றும் மீனவர்களின் நிலை என்ன ஆனது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் கற்களை வீசியும், ஆயுதங்களை கொண்டு தாக்கியும் வந்த இலங்கை கடற்படை தற்பொழுது படகுகளை சேதப்படுத்தி, அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், இனியும் தாமதிக்காமல் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.