திமுக vs தவெகவுக்கு தான் போட்டி? விஜய் குறித்த கேள்விக்கு இபிஎஸ் ரியாக்சன்!

நடப்பது நாடாளுமன்ற தேர்தல் அல்ல சட்டமன்ற தேர்தல் என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும் என இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பேசினார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் தொடர்ந்து விஜய் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கும் திமுகவுக்கு தான் போட்டி அப்படின்னு சொல்றாரு. ஒரு மிகப்பெரிய கட்சியாக அதிமுக இருக்கு. ஆனா தொடர்ந்து புறக்கணிக்கிறார் அதை எப்படி பாக்குறீங்க? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் " புறக்கணிக்கிறார்னு நீங்கத் தான் அந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுகிட்டே இருக்கிறீங்க. ஏன்னா நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அவருக்கு அப்படியொரு கருத்து தெரியுன்னு சொல்றாரு. அதுக்கு நாங்க என்ன செய்யறது? அந்தக் கட்சித் தலைவரை தான் நீங்கக் கேட்கணும். அண்ணா திமுக பிரதான எதிர்க்கட்சி 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி புரிந்த கட்சி. பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள கட்சி எங்களுடைய கட்சி.

மக்களிடத்தில் நன்மதிப்பு பெற்றமுள்ள மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணியை அண்ணாதிமுக தலைமையில் அமைத்து இருக்கிறது. அதனால மற்றவர் தலைவர் சொல்லுவதற்காக எங்களுடைய கட்சியை அவர் விமர்சனம் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது அறியாமை என்பது வெளிப்பாடு. ராசா அவர்கள் ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்காரு. அந்த ஆடியோ தமிழகம் மட்டும் இல்ல இந்தியா அளவுல வைரலா பரபரப்பா பேசப்படுகிறது.

அதைத் தான் நான் கிருஷ்ணகிரியில் சொன்னேன். இது மாதிரி பேசியிருக்காரு. அது ஒரு கருத்தைச் சொல்றாரு. திரு கருணாநிதி அவர்கள் உடல்நிலை சரியில்லாபோது வீட்டுச் சிறையில் வைத்ததாக ஒருவர் சொல்றாரு. அதோட பட்டியலின மக்களைப் பாகுபாடு பார்க்கறதா சொல்றாரு. அப்புறம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியதாக அதில் வரல. செய்திகள். நாங்களா சொல்லல. அந்த வலைத்தளத்தில் வந்த செய்திகள்.

இணையதளத்தில் வந்த செய்தியின் அடிப்படையில்தான் நான் கருத்து சொன்னேன். அது அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கறது விட்டு என் மீது பாய்வதற்கு என்ன இருக்குது? அதான் நான் தெளிவு படுத்துனேன். இந்த வந்த செய்தி உங்களோட திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு ராசா அவர்களுடைய அவர்கள் பேசியதாக ஆடியோவில் வந்த செய்தி தான் நான் தெரிவிக்கிறேன்" எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக vs தவெகவுக்கு தான் போட்டி? விஜய் குறித்த கேள்விக்கு இபிஎஸ் ரியாக்சன்!