மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi palanisamy about jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உழவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி … Read more

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

ayodhya ram temple

வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. பிரமாண்டமாக நடைபெற இருக்கும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறார்கள். கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ஆம் தேதி நண்பகல் 12.45 மணி அளவில் குழந்தை ராமர் சிலையும் வைக்கப்படவுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் … Read more

எண்ணெய் கசிவு : கூடுதல் நிவாரணம் வழங்குக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi k palanisamy

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் பெய்த கனமழையின் போது  வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து எண்ணூர் முகத்துவார பகுதியில் வெள்ள நீரோடு எண்ணெய்யும் சேர்ந்து கசிந்து வந்தது.  இதனால் கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணமாக … Read more

தென்மாவட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கவேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

edappadi palanisamy

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத் தொகையை ரூ.15,000 உயர்த்தி வழங்க வேண்டும் என திர்க்கட்சி தலைவரும், அதிமுக, பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எப்படி கையாள்வது என்ற படிப்பினையை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், … Read more

எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி!

MGRamachandran edappadipalaniswami

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று. எனவே, அவருடைய நினைவு தினத்தையொட்டிஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மக்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன், மன்சூர் அலிகான் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில்  மலர்தூவி மரியாதை செய்தார். இதற்கு முன்னதாக சென்னையில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி … Read more

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த 2 நபர்கள் – ஈபிஎஸ் கண்டனம்

ADMK Chief secretary Edappadi Palanisamy

கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பயங்கரவாத அமைப்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு வாகனத்தில் வந்து கடும் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், அந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த்னர். இந்த தாக்குதலின் 22ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மக்களவையில் அனுசரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பாராளுமன்ற பார்வையாளர்கள் கேலரியில் இருந்த ஒரு பெண் , ஒரு ஆண் என இரு நபர்கள் மக்களவையில் பாதுக்காப்பு அரண் மீறி உள்ளே நுழைந்தனர். கையில் வைத்து … Read more

அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு. அதிமுகவில் இருந்து ராம்குமார் என்பவரை கட்சியில் இருந்து உடனடியாக நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் … Read more

“மிகுந்த வேதனை…விடியா அரசே,இதனை தடை செய்” – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

திமுக அரசு,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெருங்குடியில் வசிக்கும் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவருக்கு,தாரா என்ற மனைவியும்,இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில்,தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து விட்டு மணிகண்டன் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட … Read more

“அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப் படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் … Read more

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள்- ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை!

மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு,பாரதி கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும்,சுதந்திர வேட்கையை அனைவரது நெஞ்சங்களிலும் விதைத்தவரும்,பெண் கல்வியை போற்றியவருமான பாரதியை வணங்குவதாகவும் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மரியாதை தெரிவித்துள்ளனர். டிசம்பர் 11 ஆம் தேதியான இன்று மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்த நாளாகும்.இந்நிலையில்,பாரதியாரின் 140 வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து … Read more