தமிழகத்தில் 40 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு..!

தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழக முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்யும் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி அருணாச்சலம் இன்பெக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்திலும், காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனி, இன்டர்கிரேட்டட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.