தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Income Tax Department checks in 11 places in Tamil Nadu

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி  நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்  திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக  மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தேர்தலில் சமயத்தில் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் மேற்கொண்டு வருகின்றனர்.வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக என்ற கோணத்தில்  வருமானவரிதுறை  சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.