14 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான வழக்கில்காங்கிரஸ் பொருளாளர் அகமது படேலிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசடி தொடர்பான இவ்வழக்கில், மேலும் சில காங்.,சேர்ந்த மூத்த தலைவர்களும் சிக்க வாய்ப்பு உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. காங்., கட்சியில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர் தான் அகமது படேல் (வயது 70).இவர் காங்., கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் கடந்த 2 ஆண்டுகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு வழங்கிய உழைப்பூதியத்தில் இருந்து சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசனுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் வரியை உடனடியாக செலுத்தி அதற்கான ரசீதுகளுடன் […]
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராஜாவுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர். அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான […]