பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: இளையராஜா மனம் உருக பேச்சு!!

பொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பேசிய இளையராஜா "தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு" என்று தெரிவித்தார், இதுபோன்று மற்றுமொரு சம்பவம் இனி நடந்துவிடக்கூடாது

பல தரப்பட்ட மக்களுக்கு தனது இசையை எடுத்து சென்ற இளையராஜாவுக்கு, சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் அவரது 75வது பிறந்த தின விழா நடத்தப்பட்டது.

மக்கள் மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் நடக்க கூடாதுனு நினைக்கிறாங்க, அதைத்தான் நானும் சொல்றேன்.

பொள்ளாச்சி பாலியல் கொடுமை பற்றி பேசிய இளையராஜா “தமிழக மக்களின் உணர்வே என் உணர்வு” என்று தெரிவித்தார், இதுபோன்று மற்றுமொரு சம்பவம் இனி நடந்துவிடக்கூடாது எனவும் கூறினார்.

பல தரப்பட்ட மக்களுக்கு தனது இசையை எடுத்து சென்ற இளையராஜாவுக்கு, சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் அவரது 75வது பிறந்த தின விழா நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்டு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் கலந்துரையாடினார் இளையராஜா. அப்போது பத்திரிக்கை நிருபர்கள் பொள்ளாச்சி சம்பவம் பற்றி இளையராஜாவிடம் கேட்டதற்கு, “தற்போது மக்களின் நிலையிலேயே நானும் உள்ளேன்” என்றார்

unknown node

மேலும், மக்களின் நிலைன்னு நீங்க எதை குறிப்பிடுறீங்க? என்ற கேள்விக்கு, “மக்கள் மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் நடக்க கூடாதுனு நினைக்கிறாங்க, அதைத்தான் நானும் சொல்றேன்” என்றார்.