காரைக்குடி சட்டமன்ற தொகுதி பூத் எண் 69-ல் வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் பிரபலங்களும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஹெச்.ராஜா வாக்கு செலுத்தி, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “காரைக்குடி சட்டமன்ற தொகுதி பூத் எண் 69 ல் வாக்கு செலுத்தி என் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினேன். அனைவரும் வாக்களிப்பது என்பது ஜனநாயக உரிமை. ஆகவே அதை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
unknown node