சென்னையில் பரபரப்பு., அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! இருவர் கைது.!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜியை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு அரசு மருத்துவரை ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார் என்ற பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவராக பணியில் இருந்தவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன். இவர் இன்று காலையில் பணியில் இருந்த போது, வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தப்பியோடிய மேலும் ஒருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்கு நோயாளியுடன் உடன் வந்தவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.