சென்னை : தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று திடீரென கணிசமான அளவில் குறைந்துள்ளது. இந்த ஏற்ற இறக்கம் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,760-க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.94,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையிலும் இன்று சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.
சென்னை சில்லறை தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தக சந்தையில் இந்த ஏற்ற இறக்கம், சர்வதேச எண்ணெய் விலை, உலகப் பொருளாதார நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவை ஆகிய காரணிகளால் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.திருமணம், பண்டிகை மற்றும் முதலீட்டு நோக்கத்திற்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், விலையின் ஏற்ற இறக்கத்தை கருத்தில் கொண்டு, சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்குமாறு வர்த்தகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
