நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி – தங்கம் விலை மீண்டும் குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,08,800க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.480 குறைந்து ரூ.1,08,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,600க்கு விற்கப்படுகிறது.வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமான போக்கை காட்டி வருகிறது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் காரணமாக உலகளாவிய அளவில் தங்கம் விலை ஓரளவு சரிந்து வந்த நிலையில், நகை வாங்குவோர் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

இருப்பினும், ஒரு சவரன் தங்கம் இன்னும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்குள் சுற்றி வருகிறது.நேற்று முன்தினம் (மார்ச் 28) 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,09,280க்கும் விற்கப்பட்டது. 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.11,345க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.90,760க்கும் விற்பனையானது.

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் நிலவி வரும் நிலையில், நகைப்பிரியர்கள் விலை குறைவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெள்ளி விலை மட்டும் நிலையான நிலையில் உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் மாறுபடும் என்பதால், நகை வாங்குவோர் சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்குமாறு வியாபாரிகள் அறிவுறுத்துகின்றனர்.