தங்கம் விலை உயர்வு! ஷாக்கில் நகை பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னையில் தங்கம் விலை கடந்த இரு நாட்களில் பெரும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்துள்ளது. நேற்று (மே 5, செவ்வாய்க்கிழமை) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.180 குறைந்து ரூ.13,820-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,440 குறைந்து ரூ.1,10,560-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று (மே 6, புதன்கிழமை) தங்கம் விலை மீண்டும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.230 உயர்ந்து ரூ.14,050-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்து ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரே நாளில் ரூ.1,440 குறைந்த தங்கம், அடுத்த நாளில் ரூ.1,840 உயர்ந்துள்ளது.

இந்த ஏற்ற இறக்கம் தங்கம் வாங்க நினைப்பவர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.திருமணம், பண்டிகை மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், சந்தை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து முடிவு எடுக்குமாறு வர்த்தகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சர்வதேச சந்தை ஏற்ற இறக்கம், உள்நாட்டு தேவை மற்றும் ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலையை பாதித்து வருகின்றன.வெள்ளி விலை குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

தங்கம் விலை உயர்வு! ஷாக்கில் நகை பிரியர்கள்!