தங்கம் விலை குறைவு...உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னை : இன்று (பிப்ரவரி 14, 2026) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இது தங்கம் வாங்க விரும்பும் மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இன்று ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் ரூ.1,040 குறைந்து ரூ.1,10,880-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.130 குறைந்து ரூ.13,860-க்கு விற்கப்படுகிறது. இது 22 கேரட் ஆபரணத் தங்கத்திற்கான விலை நிலவரமாகும்.

நேற்றைய தினம் தங்கம் விலையில் பெரும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. காலையில் ஒரு கிராமுக்கு ரூ.140 குறைந்திருந்த நிலையில், மாலையில் ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,920-க்கும் விற்பனையானது. ஆனால் இன்று காலை முதலே விலை மீண்டும் கணிசமாக சரிந்துள்ளது.வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனையாகிறது. நேற்று மாலை வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.260-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு உலகளாவிய தங்கம் சந்தை மாற்றங்கள், அமெரிக்க டாலர் வலுவடைதல், பணவீக்க அழுத்தம் குறைதல் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்றைய இந்த விலை குறைவு திருமணம், விழாக்கள் மற்றும் முதலீடு ஆகியவற்றுக்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் மாற்றமடைவதால், வாங்குபவர்கள் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு வாங்குவது நல்லது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.