தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்வு!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Hero Image

சென்னையில் தங்கம் விலை இன்று (ஏப்ரல் 1) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.380 உயர்ந்து ரூ.14,050க்கு விற்கப்படுகிறது.இதேபோல் 18 கேரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ரூ.11,710க்கும், சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்து ரூ.93,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 உயர்ந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 உயர்ந்து ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது.மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமான போக்கைக் காட்டி வந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்று திடீரென பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த உயர்வு நகை வாங்குவோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரம், புவியியல் அரசியல் பதற்றம் மற்றும் ரூபாயின் மதிப்பு ஆகிய காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. தற்போதைய உயர்வு காரணமாக நகைப்பிரியர்கள் விலை மேலும் உயரும் முன் வாங்கலாமா என யோசித்து வருகின்றனர்.