குஷி…தங்கம் விலை அதிரடி சரிவு…சவரனுக்கு ரூ.560 குறைவு.!
தங்கம் விலை இன்று குறைந்துள்ளதால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் சென்னையில் நேற்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருந்தது.
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.45,760க்கு கிராமுக்கு ரூ.44உயர்ந்து ரூ.5,720க்கும் விற்பனை ஆனது. எனவே, தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
அதனை தொடர்ந்து இன்று சற்று தங்கம் விலை சரிவை கண்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650-க்கும் விற்பனை. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 குறைந்து ரூ.81,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.