தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது

gold rate tn

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலை இன்றும் நீடிக்கிறது. இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,560-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,570-க்கு வர்த்தகம் நடக்கிறது.கடந்த 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் தங்க விலை சற்று உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் 12-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,680-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,710-க்கும் முடிந்தது. நேற்று மேலும் ரூ.480 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்றது. இன்று மூன்றாவது நாளாக ரூ.640 குறைந்துள்ளது.வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 சரிந்து ரூ.275-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,75,000-க்கு வர்த்தகம் நடக்கிறது.

தங்க விலை தொடர்ந்து சரியும் போது வெள்ளியும் இணைந்து குறைந்துள்ளது.இந்த தொடர் விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்க விலை, தற்போது குறைந்து வரும் போக்கில் உள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சிறு தளர்வு, டாலர் மதிப்பு ஸ்திரமடைதல், மத்திய கிழக்கு போர் பதற்றத்தில் சற்று குறைவு ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.

இன்றைய விலை குறைவு திருமண சீசன் மற்றும் பண்டிகை காலத்தில் தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதால், வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.