148 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!

Default Image

சென்னையில் இன்று (அக்-17), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 9.50 ரூபாயும், டீசல் விலை கிட்டத்தட்ட 7 ரூபாயும் குறைந்து இத்தனை நாளாக விற்கப்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து மே 22ம் தேதி பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் க்கு விற்பனை செய்யப்பட்டது. 148 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று(அக்-17) 148 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து  1லிட்டர், ரூ.102.73க்கும், டீசல் விலை 9 காசுகள் அதிகரித்து 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth