திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி!!திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கீடு
- திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக,மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.