மாற்றம் தேவை இல்லை என அஜித் சொன்னாரா? மேலாளர் விளக்கம்!

வேளச்சேரி தொகுதி திருவான்மியூர் பகுதியில் நடிகர் அஜித்குமார் வாக்களித்தார்.

Hero Image

சென்னை : இன்று தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய வாக்குச்சாவடிக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், எல்லா தேர்தல்களிலும் முதல் ஆளாக வருகை தந்து வாக்குபதிவு செய்யும் நடிகர் அஜித்குமார் இந்த முறை சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, காலையிலேயே கோட்ஷூட் அணிந்து வருகை தந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவர் வந்த செய்தி ஹாட்டாப்பிக்காக மாறிய நிலையில், அவரை பற்றிய வதந்தி தகவலும் பரவி வருகிறது. அது என்னவென்றால், அஜித்குமார் வாக்களிக்க வந்த போது செய்தியாளர்கள் அஜித்திடம் “மாற்றம் தேவைப்படுகிறதா?” என கேட்டதாகவும் அதற்கு அவர் "மாற்றம் தேவையில்லை” என சொன்னதாகவும் செய்திகள் பரவின.

இந்த செய்தி உண்மையா இல்லையா என தெரியாமல் பலரும் குழம்பிய நிலையில், தற்போது இதற்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா “மாற்றம் தேவை-தேவையில்லை என எதையும் அஜித்குமார் சொல்லவில்லை” என விளக்கமளித்திருக்கிறார்.