குறையும் கொரோனா.. தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு தொற்று உறுதி!

In Tamil Nadu, another 1,416 people have been diagnosed with corona infection, bringing the total number of cases to 7,86,163.

தமிழகத்தில் மேலும் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,86,163 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,416 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 7,86,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 382 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,16,496 ஆக அதிகரித்துள்ளது. அதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,747 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 6 பெரும், அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1,413 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,63,428 ஆக அதிகரித்துள்ளது. இன்று 69,685 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,19,72,030 ஆக அதிகரித்துள்ளது.