தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

The Chennai Meteorological Department has forecast showers in 5 districts of Tamil Nadu due to the rotation of the atmosphere

வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கேரளா முதல் கர்நாடகா மாநிலம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் அளவிற்கு மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.