விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Fire Accident - crackers

விருதுநகர் :விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (செப்டம்பர் 17) காலை, பட்டாசு தயாரிப்பு பணியின் போது ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்துகொண்டிருந்தபோது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2-3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. மீட்புப் பணிகளில் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் மருத்துவக் குழுக்கள் ஈடுபட்டன. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

சாயன கலவை செய்யும் போது உராய்வு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து பாதுகாப்பு விதிகளை மீறியது காரணமாக இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தற்போது, ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு  செய்துள்ளனர். ஏற்கனவே, பட்டாசு ஆலையின் மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலை உரிமையாளர், அவரது மகன் தலைமறைவாகியுள்ளார்.