அமமுக சார்பில் திருவாரூர் வேட்பாளர் அறிவிப்பு..!!

Default Image

திருவாரூர் இடை தேர்தலில் அமமுக சார்பில் திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர்  எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று TTV தினகரன் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து திருவாரூர் தொகுதி  காலியானது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்நிலையில் அனைத்து கட்சிகளும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவித்திருந்தனர்.குறிப்பாக திமுக மற்றும் அதிமுக அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விரும்ப மனுவை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சாவூரில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருவாரூர் சட்ட மன்ற அமமுக சார்பில் வேட்பாளராக திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று அமமுக துணை பொது செயலாளர் TTV தினகரன்  அறிவித்தார். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.எஸ் காமராஜ் 8வருகின்ற 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கின்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்