மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இதில் 5 தொகுதிகள் திரிணாமுல் காங்கிரஸ் வசமும், ஒரு தொகுதி பாஜக வசமும் இருந்தன. அதாவது, மதரிஹட் என்கிற தொகுதி பாஜகவின் கோட்டையாக உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், எ.ஜி.கர் மருத்துவ மாணவி கொலை விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலமரசுக்கு எதிராக இருந்தும் அந்தக் கட்சி தேர்தலில் வெற்றியை சாத்தியப்படுத்தி உள்ளது. […]
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக […]
இடைத்தேர்தல்: தமிழகத்தில் விக்கிரவாண்டி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போல 6 வடகிழக்கு மாநிலங்களில் 12 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், பெரும்பாலான இடங்களில் கட்சி […]
விழுப்புரம்: நாளை மறுநாள் (ஜூலை 10) விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் கடந்த சில வாரங்களாக விக்கிரவண்டியில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். […]
ஓபிஎஸ்: நடைபெற போகும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனுத்தாக்களை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியான நிலையில் அதில் தமிழக மக்களவை தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 39 தமிழக மக்களவை தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. அதே நேரத்தில் மற்றொரு முனையில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் போட்டியிட்ட அனைத்து […]
Satyaprata Sahu: தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ல் நடைபெறுகிறது. Read More – Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு […]
ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர்பால் சிங்கை, காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். வேட்பாளர் இறந்ததால் கரன்பூர் சட்டமன்ற தொகுதியில் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனால், கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் […]
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள தபி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 23 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சுமார் 96 சதவீத வாக்குகள் பதிவானது. 15,256 வாக்காளர்களில் 96.25 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதில் 7,788 ஆண்களும் 7,468 பெண்களும் அடங்குவர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று அதாவது டிசம்பர் 3 ஆம் […]
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக,நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும்,சம்பாவத் சட்டப்பேரவை தொகுதியில் புஷ்கர் தோல்வி அடைந்திருந்தார்.இதனால்,அவர் பதவி விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து,புஷ்கர் தாமிக்காக,மாநில சட்டசபைக்கான புதிய முயற்சிக்கு வழி வகுக்கும் வகையில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ கைலாஷ் கெஹ்டோரி,தனது பதவியை ராஜினாமா செய்தார்.மேலும், தாமிக்காக பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உத்தரகாண்ட் […]
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதியில் காலை நிரவப்படி 7.57 சதவிகித வாக்குகள் பதிவு. மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. இந்நிலையில், அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
காலியாக இருக்கும் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் காலியாகவுள்ள 64 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதாவது, காலியாக உள்ள 64 மக்களவை தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என மொத்தம் 65 இடங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதி […]
வேலூர் குடியாத்தம் இடைத் தேர்தல் முதற்கட்ட பணிகள் தொடக்கம். வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தநிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, முதற்கட்டமாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அனைத்து கட்சி பிரமுகர்கள் […]
இடைத்தேர்தலில் பாஜக ஆட்சியை தக்கவைத்து கொள்ள 8 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் பாஜக தள்ளப்பட்டது. நடந்து முடிந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்று எடியூரப்பா அரசு ஆட்சியை தக்கவைத்து கொண்டது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை. இதனால் […]
கடந்த 05- தேதி கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதி தவிர 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 17 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கத்தை தடை செய்ய கோரி வழக்குகள் தொடர்ந்தன. இதனால் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரியில் காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத் தேர்தலை அறிவித்தார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். நாளை மறுநாள் வேட்புமனு தாக்கலும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதியும் , வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 01-ம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 03-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெறும் என […]
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் பல்வேறு கட்டங்களாக எண்ணப்பட்டது.அதில் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 29,790 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார் . அதிமுக 71,332 திமுக 41,542 வித்தியாசம் 29,790
கடந்த மாதம் ஏப்ரல் 18 ம் தேதி தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரமக்குடியில் 4 கட்ட வாக்கு எண்ணிக்கைகள் முடிந்த நிலையில் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.அப்போது இரண்டு வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் 22 தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் 3 கட்ட வாக்கு எணிக்கைகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 3 வது கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தற்காலிகமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. படூர் எனும் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு சரிபார்க்கும் இயந்திரத்தில் திமுக வேட்பாளருக்கு 2 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்று முகவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.