#Breaking : கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து...!

A terrible fire broke out at a private match factory in Kovilpatti.

கோவில்பட்டியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டியிலுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவ்விடத்திற்கு இரண்டு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்து மதிய நேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராமல் ஏற்பட்டது தான் என ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.