பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. கோவில்பட்டியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சின்னகொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமஸ் சாமுவேல் (57) இவர், தூத்துக்குடி […]
தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவில்பட்டியில் மே 18 முதல் 29-ம் தேதி வரை தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு ஜூனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வில் பங்கேற்கவுள்ளனர். […]
கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு எல்லையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கோவில்பட்டியிலுள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டியிலுள்ள வள்ளுவர் நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டி தயாரிக்க பயன்படும் இயந்திரங்கள் இந்த தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவ்விடத்திற்கு […]
துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கோவில்பட்டி சோதனைச் சாவடி அருகேகைது செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று அதிகாலை சோதனைச்சாவடியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பணியில் இருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு கார் ஒன்று வந்துள்ளது காரை நிறுத்தி போலீசார் காரிலிருந்து மூன்று பேரிடம் விசாரணை செய்துள்ளனர், அப்பொழுது […]
ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், தீக்குச்சி உற்பத்தி பாதிப்பு. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், உள்ள தீப்பெட்டி ஆலைகள் கடந்த இரண்டு வாரங்களாக , அரசு விதித்த நிபந்தனைக்களுக்கு கட்டுப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், தீக்குச்சி செய்ய தேவையான முக்கிய மூல பொருட்களான குளோரைட், கேசின், பைக்ரோமைட் போன்ற முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால், தீப்பெட்டி உற்பத்தி […]
கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழனி பஞ்சாமிருதம், திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவ உள்ளிட்ட 34 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் கரிசல் மண்ணில் விளையும் வேர்க்கடலை மிகவும் ருசியானது பிரபலமானதும் கூட. இந்த வேர்க்கடலை கொண்டு உடன் பனைவெல்லபாகு, சுக்கு, ஏலக்காய் கலந்து இந்த வேர்க்கடலை தயாரிப்பதால் இந்த கடலைமிட்டாய்க்கு தனி ருசி உண்டு. தற்போது […]
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ம் ஆண்டுக்கான “கூகை” என்ற நாவல் பரிசு பெற்றது. தற்போது சோ.தர்மனின் சூழ் என்ற நாவலுக்கு, 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதங்களில் கரிசல் மண் […]
கோவில்பட்டியில் உள்ள பிரபல கோவிலில் ஒன்றரை வயது குழந்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்ததில் இந்த குழந்தைக்கு மனவளர்ச்சி குன்றியது தெரியவந்தது.இதையடுத்து குழந்தையை விட்டு சென்றது யார்? எப்போது விட்டு சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி , கோவில்பட்டி தமிழக நகராட்சிகளிலே முதன்மையான நகராட்சி என்ற அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்றது.ஆனால் இன்று வரை கோவில்பட்டி நகராட்சியில் தரமான , சுத்தமான பொதுகழிப்பிடம் என்பது இல்லை.அதிக மக்கள் தொகையையும் , அதிக வணிக வளாகம் கொண்ட கோவில்பட்டியில் கட்டமைப்பு வசதி என்பது மிகவும் குறைவு என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்நிலையில் கோவில்பட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதில் மக்களின் நலன் […]
கோவில்பட்டி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற ரமேஷ் (வயது 42). தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரான இவர் முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஆவார். இவர் கோவில்பட்டி-கடலையூர் ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையும், அதன் மாடியில் சர்வீஸ் மையமும் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தனது கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு மேஜையில் இருந்த ரூ.3,200-ஐ திருடினர். […]
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும். கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி. இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே உள்ள சுபாநகாில் அடையாளம் தொியாத 80 வயது மூதாட்டி சடலத்தினை கைப்பற்றி கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாா் தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்..
துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், […]
தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மண்டல அளவில் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆதன் ஒரு பகுதியாக தென்மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் வரும் 18ந்தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி,நெல்லை,கன்னியாகுமாரி, விருதுநகர், சிவகங்கை மாவட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி – விருதுநகர் மாவட்ட ஹாக்கி […]
இன்று (15.3.18) காலை கோவில்பட்டி வாட்டாச்சியர் அலுவலகத்தில் காட்டு நாயக்கன் சமுகத்திற்க்கு பழங்குடியின சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இந்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் பி.டெல்லிபாபு ex.MLA, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன்,ஒன்றியச்செயலாளர் ஜோதிபாசு,மலைவாழ் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் சக்திவேல் முருகன், சிஐடியு மாவட்டகுழு உறுப்பினர் தெய்வேந்திரன் உட்பட சுமார் […]
கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் கோவில் கருவறையில் சென்று அம்மன் நகையை திருடிய பெண் – கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற செண்பகவள்ளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலையதுறையின் கீழ் செயல்படுகிறது. இக்கோவிலுக்கு தினதோறும் ஆயிரணகணக்கான பக்தாகள் வந்த சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இக்கோவிலில் இன்று வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டது அதனை தொடர்ந்து அதிகாலை பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செண்பக வள்ளியம்மனுக்கு பூஜை முடிந்தது அருகில் உள்ள […]
தூத்துக்குடி:கோவில்பட்டியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டு நாயக்கர் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பின்னர்,நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது கோட்டாட்சியர் அனிதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகரச் செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையின் போது பிரட்சனைக்கு தீர்வு காணாமல் கோட்டாட்சியர் அனிதா கைப்பேசியில் வாட்ஸ்அப் பயன்படுத்தியுள்ளார்.இது அங்கிருந்த அனைவரையும் அலட்சியம் படுத்தியதை காட்டுகிறது.கோட்டாட்சியரின் இச்செயலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் […]
கோவில்பட்டி : திமுகவின் ஆர்கே நகர் தேர்தல் குறித்த மு.க.அழகிாி மற்றும் அதிமுக,எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டா் குரூமுா்த்தி விமா்சனங்கள் குறித்து நான் ஏதும் கருத்து கூறவிரும்பவில்லை எனத் தெரிவித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அப்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் “நடிகா் ரஜினிகாந்த் என் நண்பா் அவரது அரசியல் முடிவு குறித்து அவா் அறிவிக்கட்டும் அதன் பின்பு நான் எனது கருத்தை தெரிவிக்கிறேன் .ஆகையால் தற்போது நான் அது கருத்து […]