#BREAKING: மாணவி கொலை – இளைஞருக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்!

Default Image

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சதீஷுக்கு அக்.28 வரை காவல்.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியிடம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சத்யா, உடல் நசுங்கி உயிரிழந்தார். கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் சதிஷ் என்ற இளைஞருக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அக்.28-ஆம் தேதி வரை சதீஷை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தப்பியோடிய சதீஷை துரைப்பாக்கம் அருகே கைது செய்யப்பட்ட நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்துக்கு முகத்தை மறைத்து ஏன் இளைஞரை அழைத்து வந்தீர்கள் என்று காவல்துறையுடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்