தமிழகம்,புதுச்சேரியில் இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்டன் காணப்படும் என்றும்,சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே,லட்சத்தீவு,கேரள கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
unknown node