#Breaking:10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் – அண்ணா பல்.கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு 10

தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதனால் அவை வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின்  கீழ் 494 தனியார் கல்லூரிகள் உள்ள நிலையில்,தற்போது அவற்றில் 10 கல்லூரிகள் மூடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.