தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் முதல் தேர்வு கட்டணம், டிகிரி சான்றிதழ் கட்டணம் வரை நிர்ணயம் செய்கிறது. பழைய கட்டணம் : முன்னதாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டணம் ஒரு பாடத்திற்கு 150 என கடந்த 2014ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டு தற்போது வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது. செய்முறை தேர்வு கட்டணம் 300 ரூபாய் என்றும், முதுகலை செய்முறை தேர்வு கட்டணம் 450 […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆகவும்,இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், ஆய்வு கட்டுரை (ஒரு தாளுக்கு) சமர்ப்பிப்புக்கு ரூ.600-ஆக இருந்த கட்டணம் ரூ.900-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1,000 […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் உயர்வால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, இளநிலை பொறியியல் படிப்பு தேர்வுகளுக்கு ஒரு தாளுக்கான தேர்வுக்கட்டணம் ரூ.150-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு ரூ.300-ஆக இருந்த தேர்வுக்கட்டணம் தற்போது ரூ.450-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு செய்முறைக்கு ரூ.450-ஆக இருந்த தேர்வு கட்டணம் ரூ.650-ஆகவும், இதுபோன்று முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை […]
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையிடமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்க்கு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு தற்காலிக முறைப்படி அண்ணா பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமித்தது. அவர்களுக்கு தொகுப்பூதியமாக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம், நிரந்தர ஆசியர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் சென்னை […]
உறுப்பு கல்லூரிகளில் 351 உதவி பேராசிரியர் காலி இடங்களை நிரப்ப வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தம் ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. AICTE விதிப்படி, 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலி பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும், அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும் எனவும் சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. […]
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வுகள் தேதி மீண்டும் மாற்றம் அண்ணா பல்கலை. பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு, மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், வரும் 24, 31ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில், தமிழ்பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு வரும் டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. BA, MA ஆகியவற்றில் தமிழ் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 55% மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கரடு அவசியம் என்றும் SLET, NET, SET ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் […]
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியாக முன்னெஞ்சறிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மற்றும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
TANCET தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய படிப்புகளுக்கான TANCET -2023 தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET -2023 தேர்வு பிப்ரவரி 25, 26-ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வுக்கான புதிய தேதி tancet.annauniv.edu என்ற […]
பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று முதல் தொடக்கம். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு இன்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் 58,307 இடங்கள் நிரப்பட்ட நிலையில், பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று […]
அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 2001-02 முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2001-02 கல்வியாண்டின் மூன்றாவது செமஸ்டரிலிருந்தும், 2002-03 கல்வியாண்டின் முதல் செமஸ்டரிலிருந்து, இறுதி செமஸ்டர் வரை அரியர் வைத்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால் நடைபெறவுள்ள தேர்வில் பகிர்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரியர் எழுதவுள்ள […]
பொறியியல் கல்லூரிகளுக்கு டிச.8 முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ […]
திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன்படுத்துகின்றனர் என திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாகவே காட்ட நினைக்கின்றனர். ஆனால், அது கற்பிக்கும் ஆன்மிகம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆன்மிகம், நீதி சாஸ்திரம் குறித்து திருக்குறள் பேசுகிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யூ.போப் வேண்டுமென்றே இதனை மாற்றி மொழிபெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மை கடவுள் என […]
ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கைப்பற்றக்கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவு. பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடாது என மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ள பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி தர வேண்டும் என்றும் பேராசிரியர்களின் தேர்வு, நியமனம், ஊதியம் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எக்காரணம் கொண்டும் கைப்பற்றக்கூடாது. […]
புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக வரும் 17-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை. பொறியியல் பாடத் திட்டங்கள் நடப்பாண்டில் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டங்களை வகுத்துள்ளது. முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மாற்றிஅமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது என்றும் இதற்கு முன்னதாக கல்வி மானியக் குழுவில் ஒப்புதல் பெற […]
பொறியியல் கலந்தாய்வு 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு வரும் 25ம் […]
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது. மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் […]
எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். அண்ணா பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம். தமிழகத்தில் உயர்கல்வி […]