#Breaking:புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம் – தமிழக அரசு தகவல்..!

#Breaking: 10 lakh people apply for new smart ration card - Tamil Nadu government information ..!

புதிய ரேசன் ஸ்மார்ட் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய ரேசன் அட்டை கோரி மே மாதம் முதல் செப்.26 ஆம் தேதி வரை கடந்த 5 மாதத்தில் 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,விண்ணப்பித்தவர்களில் 93% பேருக்கு புதிய ரேசன் அட்டை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது,10 லட்சம் விண்ணப்பங்களில் 7.28 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும்.2.61 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு,ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் 6.65 லட்சம் பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.மேலும்,63,601 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடந்து வரும் நிலையில்,63,780 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.