துபாய் : நடிகர் அஜித் சினிமாத்துறையில் நடிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் அதற்கு அடுத்தபடியாக கார் பந்தயங்களில் கலந்துகொன்டு விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்த விபத்தால், அஜித் கார் ரேஸில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது அணி சிறப்பாக செயல்பட்டு 3வது இடம் பிடித்தது. அஜித்தின் அணி 3-வது இடத்தில் பிடித்ததை […]
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று திடீரென மத்திய அரசு சார்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது. அதில், இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் பலமுறை கலந்து ஆலோசித்த போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் ஏலம் தொடங்கிய போதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு எடுத்ததாகவும் நவம்பர் […]
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் எழுந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , தீர்மானமும் […]
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,44,41,750 அதாவது (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியிருந்தது. இதனையடுத்து, மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) […]
சென்னை : பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மையம் கொண்டிருக்கும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பிக்கள், […]
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிப்பவர்கள் B.Pharm/D.Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது மருந்தகம் அமைக்க முறையான ஒப்புதல் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் […]
பெங்களூரு : கர்நாடகாவில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக பெங்களுருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் கட்டப்பட்டு வந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கிய 20பேர் காயத்துடன் மீட்கப்பட்டாலும், இருப்பினும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சத்யராஜ் என இருவர் பரிதாபமாக உயிரிழிந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து காரணமாக கட்டிட […]
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ‘பிங்க் ஆட்டோ’ சென்னை மாநகரில் இயக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு தகுதியான 250 பெண்களுக்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்கு தகுதியான பெண்கள் வரும் நவம்பர்-23ம் தேதிக்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பிங்க் ஆட்டோக்களில் அவசர காலங்களில் புகார்களை விரைவாக தெரியப்படுத்த காவல் உதவி […]
சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்தோருக்கும் சிற்பபு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், சர்க்கரை ஆலைக்கும் இந்த சிறப்பு ஊக்கத்தொகையானது வழங்கப்படும் எனவும் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3134.75 ரூபாயும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது […]
சென்னை : தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்படி, கொண்டாடிவிட்டு அடுத்த நாள் அவர்களது வீட்டுக்கு மற்றும் வேலைக்கு திரும்புவோருக்கு சிரமமாக அமையும் என்பதர்காக தமிழக அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் , பள்ளி. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் நவம்பர்-1ம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த […]
தமிழக அரசு நடத்தும், ஜப்பானிய மொழி கற்கும் பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க அக்-15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : தமிழக அரசின், நான் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் ஜப்பானிய மொழி கற்கும் புதிய பாடத்திட்டத்தை இலவசமாக கற்கலாம் என தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பானிய மொழியை கற்க விரும்புவோர் இதில் பதிவு செய்து பலனடையலாம். மேலும், ஜப்பானில் 18 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு இருப்பதால் அங்கு சென்று வேலையை எளிதில் […]
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார். பாராலிம்பிக்கில் தொடரில் கலந்து கொண்டு வெள்ளி மட்டும் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி, மணிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்டோருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இதுவரை இல்லாத அளவிற்கு பாராலிம்பிக் தொடரில் இந்த ஆண்டு இந்திய அணி 29 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தது. அதில், 7 தங்கப்பதக்கமும், 9 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 13 […]
TNPSC : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20ம் தேதி வெளியானது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இதுவரை […]
தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]
தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி […]
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (டிச.08) விடுமுறையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. மழை பாதிப்பு எதிரொலியாக சென்னையில் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை நிவாரண மற்றும் மீட்பு பணிகள் சில இடங்களில் நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5-ஆவது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு […]
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் பயன்பெறும் […]
புதிய ரேசன் ஸ்மார்ட் அட்டைக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேசன் அட்டை கோரி மே மாதம் முதல் செப்.26 ஆம் தேதி வரை கடந்த 5 மாதத்தில் 10 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து,விண்ணப்பித்தவர்களில் 93% பேருக்கு புதிய ரேசன் அட்டை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது,10 லட்சம் விண்ணப்பங்களில் 7.28 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும்.2.61 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் […]
மக்களின் வரிப் பணம் வீணாகக்கூடிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதெல்லாம் மாநில அரசின் கடமை: “சாலைகளின் இருமருங்கிலும் இடத்திற்கு தகுந்தாற்போல் பாதசாரிகளின் அளவிற்கு பொருத்தமான அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பதும், அந்த நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதும், அவ்வாறு அமைக்கப்படும் நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்கு ஏதுவாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும் மாநில […]
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு […]