விருதுநகர் கல்குவாரியில் வெடி விபத்து.! 3 பேர் உடல் சிதறி பலி.!

death

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கிரஷர் குவாரியில் வெடி வைக்கையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்