அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பால் மரணம்...!

Aravind Eye Hospital Group Chairman Srinivasan dies of heart attack

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக காலமானார்.

தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்(வயது 89),கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் ,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில்,அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார்.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து,மறைந்த அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் அவர்களின் இறுதி சடங்குகள் இன்று காலை  மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.