#Elections2021: தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த நடிகர் சிம்பு!

Actor Simbu did his democratic duty by voting. He goes polling station riding his bike to the polling booth in T Nagar

சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து, தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் நடிகர் சிம்பு.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதாக தொடங்கியது. மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் சினிமா பிரபலங்களான நடிகர் அஜித், கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பலர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு, சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து, தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.