செல்போன் கொடுக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு மாணவன்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!
தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுவனின் உடலை மீட்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சிறுவன் அவரது தாயார் வெளியூர் கிளம்பிய போது, செல்போனை கேட்டதாகவும், அதற்க்கு ஜோதிமணி மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.