ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் உயிரிழப்பு!

திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு.
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளார்களை ஏற்றி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது. தடுப்புசுவரின் மறுபக்கம் சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் உருக்குலைந்ததில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்ந்தனர். மேலும் சிலர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025