தூத்துக்குடி துப்பாக்கி சூடு.! 4 காவலர்களை தொடர்ந்து 3 வட்டாச்சியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!

Default Image

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் – தமிழக அரசு நடவடிக்கை. 

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உண்மை தன்மை ஆராய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்டவர்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

ஏற்கனவே, இதில் சம்பந்தப்பட்ட அப்போதைய காவல் ஆய்வளர் திருமலை தற்போது நெல்லை உதவி ஆணையாராக இருக்கிறார், காவலர்கள் சுடலைக்கண்ணு தற்போது நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலைத்தில் முதல் நிலை காவலராக இருக்கிறார்.  சதிஷ், சங்கர் என 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்