சானிடைசர் பாட்டில் வெடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!

திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி இ.பி ரோடு, விறகுப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் 13 வயது ஸ்ரீராம். இந்த சிறுவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட எண்ணியுள்ளார். அதனால் முருகேசன் என்பவர் வீட்டிற்கு முன்னால் கற்களை அடுக்கி வைத்து அடுப்பு செய்துள்ளனர். இந்த அடுப்பை பற்ற வைப்பதற்காக சானிடைசரை உபயோகப்படுத்தியுள்ளார்.

இதனால் சானிடைசர் பாட்டில் வெடித்து அந்த சிறுவன் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயத்தால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அச்சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  இதில் இந்த 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், இந்த சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.