திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இ.பி ரோடு, விறகுப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் 13 வயது ஸ்ரீராம். இந்த சிறுவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட எண்ணியுள்ளார். அதனால் முருகேசன் என்பவர் வீட்டிற்கு முன்னால் கற்களை அடுக்கி வைத்து […]
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் சானிடைசர் கொண்டு போலி மதுபான தயாரித்த 9 பேரை அதிரடியாக கைது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் அரசு மதுபானக் கடைகளை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுப்பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் அல்லாடிவந்த நிலையில் சிலர் அதனை பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே சட்ட விரோதமாக வீட்டிலேயே மது தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடியை அடுத்த அகரம் ஊராட்சி இராமநாதன் குப்பத்தில் போலி மதுபானம் வீட்டிலேயே தயாரிக்கப்படுவது குறித்து […]
உலகம் முழுவதிலும் கடந்த பத்து மாதத்திற்கு மேலாக வாட்டி வதைத்து வரக்கூடிய பெரும் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் உயிரிழந்துள்ள நிலையில் சாதாரணமாக நாம் வெளியில் செல்லும்போது நமக்கு மிகவும் முக்கியமானது என்றால் முதலில் கை குட்டை, மழை நேரத்தில் குடை என எடுத்துக் கொள்வது போல தற்பொழுது கடந்த சில மாதங்களாகவே நாம் வெளியில் செல்லும்பொழுது நமக்கு தேவை கைகளை சுத்திகரிப்பதற்கு […]
அக்டோபர்-4 ஆம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை யு.பி.எஸ்.சி வெளியிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை அண்மையில் யு.பி.எஸ்.சி மாற்றியது. புதிய அட்டவணையின்படி, இந்த தேர்வு வருகின்ற அக்டோபர் 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அதில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இந்த தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை யூனியன் […]
அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல பேக்டிரியாக்களையும் அழித்துவிடும். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உலக சுகாதார நிபுணர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறிவருகின்றனர். அதில், முக்கியமானவை, முகக்கவசம் அணிவது, கைகழுவுவதும், சமூக இடைவெளி ஆகியவை ஆகும். இதில் முகக்கவசமும், தனிமனித இடைவெளியும் பாதிப்புகளை ஏற்படுத்த போவதில்லை. ஆனால், ஆல்கஹால் கலந்திருக்கும் அதிக அளவில் சானிடைஸர்களை கொண்டு கைகழுவி வந்தால், அது உடலில் உள்ள நல்ல […]
சானிடைசரால் இவ்வளவு ஆபத்து உள்ளதா? உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதன் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பொதுமக்கள் வெளியே செல்லும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வரும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சானிடைசர்களை பொறுத்தவரையில், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆற்றல் கொண்டது. அந்த வகையில், பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்ஜோகிந்தர் […]
சானிடைசரால் எரிந்து சாம்பலான இருசக்கர வாகனம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருமிகள் கைகளில் தங்கி இருக்காமல், கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக சானிடைசர் பயான்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில், பைக்கில் பெட்ரோல் டேங்க் காருக்குள் வைத்த சானிடைசரால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு […]
சல்மான்கான் மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் மும்பை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி 85 பேரை தாக்கி உள்ளது.கொரோனா வைரசால் 2 பேர் இறந்துள்ளனர். இதனால் மக்கள் பயத்தில் உள்ளனர்.மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல மாநிலங்களில் மக்கள் கூடும் ஜிம் , திரையரங்கம் , போன்ற இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.மேலும் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து முக கவசம், கையை சுத்தப்படுத்தும் […]